வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.
vAnOkki vAzhum ulakellAm mannavankOnOkki vAzhung kuTi
Mathichiyam Bala
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகத்து உயிர்கள் அனைத்தும் வானம் தரும் மழையை நம்பி வாழ்வது போல, நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்களை ஆளும் தலைவனின் நேர்மையான செங்கோல் ஆட்சியை நம்பி வாழ்கின்றனர்.
• உலகு எல்லாம் = உலகில் வாழும் உயிர்கள் எல்லாம்,• வான் நோக்கி வாழும் = வானம் பொழியும் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன;• குடி = அதுபோல குடிமக்கள் அனைவரும்,• மன்னவன் கோல் நோக்கி வாழும் = ஆளும் தலைவனின் நேர்மையான செங்கோல் நீதியை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
மு.வரதராசன்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
பரிமேலழகர்
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
Meaning in English
All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all





