பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.
peNNin peruntakka yAvuLa kaRpennumtiNmaiuN TAkap peRin
Prasad McCoy
பொருள் / உரை
முருகா எளிய உரை
கற்பென்னும் திண்மை பெண்ணிடம் இருந்தால்!தூய ஒழுக்கம் அவளில் நிறைந்தால்!அவளை விஞ்சிடும் செல்வம் வேறில்லை!உலகில் அவளுக்கு நிகரில்லை!
• கற்பு என்னும் = ஒருமைப்பாடு மற்றும் தூய ஒழுக்க நெறி என்னும்• திண்மை உண்டாகப் பெறின் = மன உறுதி ஒரு பெண்ணிடம் அமையப் பெற்றால்,• பெண்ணின் = அத்தகைய பெருமைமிக்க பெண்ணை விட• பெருந்தக்க யாவுள = உலகத்தில் மேலான சிறந்த செல்வம் வேறு என்ன இருக்க முடியும்?
மு.வரதராசன்
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
பரிமேலழகர்
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவனபிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?
Meaning in English
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain





