இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை.
illaten illavaL mANpAnAl uLLatenillavaL mANAk kaTai
Aravind Karneeswaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• இல்லவள் = குடும்பத்தின் தலைவியான மனைவி• மாண்பு ஆனால் = சிறந்த நற்குணங்கள் உடையவளாக அமைந்தால்• இல்லது என் = அந்த வீட்டில் இல்லாத குறை என்ன இருக்கிறது? (எல்லாச் செல்வங்களும் நிறைந்திருக்கும்);• இல்லவள் = அதே மனைவி• மாணாக் கடை = நற்பண்புகள் இல்லாதவளாக அமைந்தால்• உள்ளது என் = அந்த வீட்டில் மிஞ்சி இருப்பதுதான் என்ன? (எதுவுமே இல்லை).எளிய விளக்கம்:மனைவி நல்ல பண்புடன் இருந்திடில்!மனைவி நற்பண்பு இல்லாமல் போயிடில்!அந்த இல்லத்தில் குறை ஒன்றும் இல்லையே!அந்த இல்லத்தில் மிச்சம் ஒன்றும் இல்லையே!
மு.வரதராசன்
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
பரிமேலழகர்
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?
Meaning in English
There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells





