மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.
manaimATsi illALkaN illAyin vAzhkkaienaimATsit tAyinum il
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனைக்கேற்ற நற்குணம் இல்லாதவிடின்!வாழ்க்கை எத்தனைப் பெருமை பெற்றிடினும்!அதிலே சிறிதும் பயனும் இல்லையே!அதனில் ஒரு பெருமையும் இல்லையே!
• மனைமாட்சி = குடும்பத்திற்குரிய நற்குண நற்செய்கைகள்• இல்லாள்கண் = மனைவியிடத்தில்• இல்லாயின் = இல்லாமல் போனால்,• வாழ்க்கை = அவனது குடும்ப வாழ்க்கையானது• எனை மாட்சித்து ஆயினும் = வேறு எத்தனை கோடிப் பெருமைகளையும் செல்வங்களையும் பெற்றிருந்தாலும்• இல் = ஒன்றுமே இல்லாத வீணான வாழ்க்கையாகும்.
மு.வரதராசன்
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
பரிமேலழகர்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.)
சாலமன் பாப்பையா
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
Meaning in English
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life





