மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
manaittakka mANpuTaiyaL AkittaR koNTAnvaLattakkAL vAzhkkait tuNai
Ramu Maharajapuram
பொருள் / உரை
முருகா எளிய உரை
இல்வாழ்விற்கு ஏற்ற நற்குணம் கொண்டாள்!கணவன் வளத்திற்கேற்ப நடந்தாள்!அவளே சிறந்த வாழ்க்கைத் துணையாம்!அவளே இல்லற வாழ்க்கைத் துணையாம்!
• மனைத்தக்க = குடும்ப வாழ்க்கைக்குப் பொருத்தமான• மாண்பு உடையள் ஆகி = சிறந்த நற்குணங்களையும் நற்செயல்களையும் உடையவளாகி,• தற்கொண்டான் = தன்னை மணந்துகொண்ட கணவனுடைய• வளம் தக்காள் = பொருள் வருவாய்க்கு ஏற்பக் குடும்பத்தை நடத்துபவளே• வாழ்க்கைத் துணை = சிறந்த வாழ்க்கைத் துணை (மனைவி) ஆவாள்.
Murugaa simple commentary
She possessed good qualities suited to domestic life!She conducted herself according to her husband's means!She herself is the excellent life partner!She herself is the partner in domestic life!
• Befitting the home = suitable for family life• Possessing excellence = becoming one who possesses excellent good qualities and good deeds,• Her husband = of the husband who married her• Suited to his means = she who manages the family according to material income• Life partner = will be an excellent life partner (wife).
Machine translation from the Tamil
மு.வரதராசன்
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
பரிமேலழகர்
மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத்துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)
Parimelazhagar
She who possesses excellence suited to the household and suits the wealth of him who married her, is she who possesses good qualities and good deeds suited to household virtue and leads a life suited to the income of him who married her; a life partner, is an aid to that. (Good qualities are: cherishing renunciants, entertaining guests, having compassion towards the poor, and so forth. Good deeds are: knowing and maintaining the things needed for life, skill in kitchen work, practising benevolence, and so forth. A life suited to income is: knowing the capital and spending in accordance with it. By this, it was stated that these two virtues are supreme.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
Meaning in English
As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she

