Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 50

அறத்துப்பால்இல்லறவியல்5. இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.

vaiyattuL vAzhvAngku vAzhpavan vAnuRaiyumteyvattuL vaikkap paTum

Vasudevan

பொருள் / உரை

முருகா எளிய உரை

பூவுலகில் முறைப்படி வாழ்பவன் என்றும்!வானுலகத்தில் உறைகின்ற தெய்வம் என்றும்!இணையாக அவனை மதிக்கப்படுவான்!உலகத்தால் தெய்வமெனப் போற்றப்படுவான்!

• வையத்துள் = இந்த பூவுலகில்• வாழ்வாங்கு வாழ்பவன் = இல்லறத்திற்குரிய அறநெறியில் வழுவாது வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன்,• வான் உறையும் = வானுலகில் வாழ்கின்ற• தெய்வத்துள் = தெய்வங்களுக்கு இணையாக வைத்து• வைக்கப்படும் = உலக மக்களால் போற்றி மதிக்கப்படுவான்.

மு.வரதராசன்

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

பரிமேலழகர்

வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்)

சாலமன் பாப்பையா

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

Meaning in English

Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout