அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
aRanenap paTTatE ilvAzhkkai aஃtumpiRanpazhippa tillAyin nanRu
Veeramani Raju
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறநூல்கள் சொல்லும் அறம் என்பதுவே!இல்வாழ்க்கை ஒன்றே அறம் ஆகும் அதுவே!துறவும் பழியின்றி இருப்பின் நன்றே!தூய்மையாய் விளங்கிடின் மிகவும் நன்றே!
• அறன் எனப் பட்டதே = அறநூல்களில் 'அறம்' என்று சிறப்பித்துக் கூறப்பட்டது• இல்வாழ்க்கை = குடும்ப வாழ்க்கையே ஆகும்;• அஃதும் = அந்த வாழ்க்கையானது (அல்லது துறவறமும்)• பிறன் பழிப்பது = பிறர் பழித்துரைக்கும் குற்றம்• இல்லாயின் நன்று = இல்லாதவாறு தூய்மையாக அமைந்தால் மிகவும் நல்லதாகும்.
மு.வரதராசன்
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
பரிமேலழகர்
அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
Meaning in English
The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim





