Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 48

அறத்துப்பால்இல்லறவியல்5. இல்வாழ்க்கை

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.

ARRin ozhukki aRanizhukkA ilvAzhkkainORpArin nOnmai uTaittu

SPR Prime Media

பொருள் / உரை

முருகா எளிய உரை

மற்றவரை நல்வழியில் நடத்துமே!தானும் தன் அறம் தவறாமல் வாழுமே!நோன்பு இருந்தோர் நோன்மையையும் விஞ்சுமே!பெரும் பேராற்றலை இல்வாழ்க்கை பெறுமே!

• ஆற்றின் ஒழுக்கி = மற்றவர்களையும் அவரவர்க்குரிய நல்வழியில் நடக்க உதவி செய்து,• அறன் இழுக்கா = தானும் தன் இல்லற தர்மத்திலிருந்து தவறாமல் வாழ்கின்ற• இல்வாழ்க்கை = குடும்ப வாழ்க்கையானது,• நோற்பாரின் = உண்ணா நோன்பிருந்து உடலை வருத்தித் தவம் செய்வோரின்• நோன்மை உடைத்து = தவ வலிமையையும் பொறுமையையும் விட மிகச் சிறந்த பேராற்றல் உடையதாகும்.

மு.வரதராசன்

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

பரிமேலழகர்

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)

சாலமன் பாப்பையா

மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

Meaning in English

Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout