இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.
iyalpinAn ilvAzhkkai vAzhpavan enpAnmuyalvAruL ellAm talai
Deepan Chakravarthy
பொருள் / உரை
முருகா எளிய உரை
நல்லற இயல்பில் வாழ்பவன் என்பான்!இல்வாழ்க்கை நடத்தும் தலைவன் என்பான்!புலனடக்கி முயல்வோர்க்கும் மிக்கோன்!முதன்மையாய் நிற்பான் அவனே மிக்கோன்!
• இயல்பினான் = இல்லறத்திற்குரிய நல்லற இயல்புகளோடு• இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் = குடும்ப வாழ்க்கையை நடத்தி வாழ்பவன்,• முயல்வாருள் எல்லாம் = ஐம்புலன்களை அடக்கி ஆன்ம விடுதலை பெறத் தவம் இயற்றும் மனிதர்கள் எல்லாரிலும்• தலை = முதன்மையான மேலானவனாகத் திகழ்வான்.
மு.வரதராசன்
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
பரிமேலழகர்
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
Meaning in English
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place





