Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 46

அறத்துப்பால்இல்லறவியல்5. இல்வாழ்க்கை

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ எவன்.

aRattARRin ilvAzhkkai ARRin puRattARRilpOoyp peRuva tevan

Disha Prakash

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறவழியில் இல்வாழ்க்கை நடத்தினால்!காடு புகுந்தே வேறுவழி மேற்கொண்டால்!வேறெதுண்டு பெறவேண்டும் பயனாக?கிடைப்பதுண்டோ மேலான பயனாக?

• இல்வாழ்க்கை = ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையை• அறத்தாற்றின் ஆற்றின் = அறநெறி வழுவாமல் செம்மையாக நடத்தி வாழ்வானானால்,• புறத்தாற்றில் = இல்லறத்திற்குப் புறம்பான பிற வழிகளில் (காடு சென்று துறவு மேற்கொள்வதில்)• போஒய்ப் பெறுவது எவன் = போய்ப் பெறக்கூடிய மேலான பயன் வேறு என்ன இருக்க முடியும்?

மு.வரதராசன்

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

பரிமேலழகர்

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)

சாலமன் பாப்பையா

மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?

Meaning in English

If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout