Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 539

பொருட்பால்அரசியல்54. பொச்சாவாமை

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

ikazhssiyiR keTTArai uLLuka tAntammakizhssiyin maintuRum pOzhtu

Kasthuri Sahathevan

பொருள் / உரை

முருகா எளிய உரை

வெற்றியின் மகிழ்ச்சியால் மயங்கி விழிப்புணர்வை இழந்து மமதை கொள்ளும் போதெல்லாம், முற்காலத்தில் அதே போன்ற கவனக்குறைவாலும் அலட்சிய மறதியாலும் அழிந்து போனவர்களை நினைவுகூர்ந்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

• தாம் தம் மகிழ்ச்சியின் = தாம் அடைந்த வெற்றியின் மகிழ்ச்சியில் மயங்கி,• மைந்து உறும் போழ்து = விழிப்புணர்வை இழந்து தலைக்கனம் கொள்ளும் போதெல்லாம்,• இகழ்ச்சியின் கெட்டாரை = அலட்சியத்தாலும் கவனக்குறைவான மறதியாலும் அழிந்து போனவர்களை,• உள்ளுக = நினைத்துப் பார்த்து உடனே தன்னை எச்சரித்துக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

பரிமேலழகர்

தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க. (காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

Meaning in English

Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout