Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 538

பொருட்பால்அரசியல்54. பொச்சாவாமை

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

pukazhntavai pORRis seyalvENTunj seyyAtikazhntArk kezhumaiyum il

Deepthi Suresh

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்கள் நன்மையானவை என்று புகழ்ந்து போற்றிய கடமைகளை விழிப்புணர்வோடு கடைப்பிடித்துச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் கவனக்குறைவால் புறக்கணிப்பவர்களுக்கு எக்காலத்திலும் நல்வாழ்வு அமையாது.

• புகழ்ந்தவை = சான்றோர்கள் உயர்ந்தவை என்று போற்றிய நற்செயல்களை,• போற்றிச் செயல் வேண்டும் = விழிப்புணர்வோடு விரும்பிப் போற்றிச் செய்ய வேண்டும்;• செய்யாது இகழ்ந்தார்க்கு = அவ்வாறு செய்யாமல் மறதியாலும் அலட்சியத்தாலும் புறக்கணிப்பவர்களுக்கு,• எழுமையும் இல் = எக்காலத்திலும் எந்தப் பிறவியிலும் நன்மை உண்டாகாது.

மு.வரதராசன்

சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

பரிமேலழகர்

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான். (அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

Meaning in English

Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout