இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல்.
izhukkAmai yArmATTum enRum vazhukkAmaivAyin atuvoppa til
Janaki
பொருள் / உரை
முருகா எளிய உரை
யாரிடத்திலும் எக்காலத்திலும் விழிப்புணர்வை இழந்து கடமையை மறக்காத விழிப்புணர்வுப் பண்பு ஒருவருக்குத் தவறாமல் அமையுமானால், அவருக்கு அதைவிட நன்மை தரக்கூடிய சிறந்த ஆற்றல் உலகில் வேறு எதுவும் இல்லை.
• யார்மாட்டும் = யாரிடத்திலும்,• என்றும் = எக்காலத்திலும்,• இழுக்காமை = மறதியால் விழிப்புணர்வை இழக்காத பண்பு,• வழுக்காமை வாயின் = சிறிதும் பிசகாமல் ஒருவனுக்கு உறுதியாகக் கிடைக்குமானால்,• அது ஒப்பது இல் = அதற்கு இணையான பெருநன்மை உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
மு.வரதராசன்
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர்
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. (வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.)
சாலமன் பாப்பையா
எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.
Meaning in English
Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain





