Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 535

பொருட்பால்அரசியல்54. பொச்சாவாமை

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும்.

munnuRak kAvA tizhukkiyAn tanpizhaipinnU Rirangki viTum

Nirmala

பொருள் / உரை

முருகா எளிய உரை

துன்பங்கள் வருவதற்கு முன்பே விழிப்புணர்வோடு தற்காத்துக் கொள்ளாமல் மறதியால் தவறியவன், ஆபத்து நேரில் வந்து தாக்கிய பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் தன் கவனக்குறைவை எண்ணி வருந்துவான்.

• முன்னுறக் காவாது = ஆபத்துகள் வருவதற்கு முன்பே விழிப்புடன் சிந்தித்துப் பாதுகாத்துக் கொள்ளாமல்,• இழுக்கியான் = மறதியால் கவனக்குறைவாக இருந்த ஒருவன்,• பின் ஊறு = பின்னர் அத்துன்பம் வந்து தாக்கும் போது,• தன்பிழை இரங்கி விடும் = தடுக்க முடியாமல் தன் முந்தைய பிழையை எண்ணி மனம் வருந்துவான்.

மு.வரதராசன்

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

பரிமேலழகர்

முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

Meaning in English

To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout