பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு.
possAppArk killai pukazhmai yatuvulakatteppAnU lOrkkun tuNivu
Sabitha
பொருள் / உரை
முருகா எளிய உரை
கவனக்குறைவும் மறதியும் கொண்டு விழிப்புணர்வின்றிச் செயல்படுபவர்களுக்கு உலகில் நிலையான நற்புகழ் கிடைக்காது; இது உலகில் உள்ள அனைத்து நீதி நூல்களையும் வகுத்த அறிஞர்களின் ஒருமித்த முடிவான கருத்தாகும்.
• பொச்சாப்பார்க்கு = விழிப்புணர்வின்றி மறதியும் கவனக்குறைவும் உடையவர்களுக்கு,• புகழ்மை இல்லை = நிலைத்து நிற்கும் நற்புகழ் ஒருபோதும் உண்டாகாது;• அது = இந்த உண்மையே,• உலகத்து எப்பால் நூலோர்க்கும் = உலகில் உள்ள அனைத்துத் துறை அறிஞர்களுக்கும் நீதி நூல்களுக்கும்,• துணிவு = ஒருமித்த உறுதியான முடிவாகும்.
மு.வரதராசன்
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
பரிமேலழகர்
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)
சாலமன் பாப்பையா
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
Meaning in English
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school





