Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 531

பொருட்பால்அரசியல்54. பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

iRanta vekuLiyin tItE siRantauvakai makizhssiyiR sOrvu

Laya Varshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு = அளவு கடந்த வெற்றியாலும் மகிழ்ச்சியாலும் மயங்கி கடமையை மறக்கும் விழிப்புணர்வின்மை,• இறந்த வெகுளியின் = வரம்பு மீறிய கொடிய கோபத்தால் வரும் தீமையை விடவும்,• தீதே = மிகக் கொடுமையான தீமையாகும்.எளிய விளக்கம்:பெருவெற்றியிலும் உவகைக் களிப்பிலும் மயங்கி விழிப்புணர்வை இழந்து கடமையை மறப்பது, எல்லைமீறிய கொடிய கோபத்தால் ஏற்படும் இழப்பை விடவும் பெரும் அழிவை உண்டாக்கும்.

மு.வரதராசன்

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

பரிமேலழகர்

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)

சாலமன் பாப்பையா

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

Meaning in English

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout