Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 530

பொருட்பால்அரசியல்53. சுற்றந்தழால்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

uzhaippirintu kAraNattin vantAnai vEntanizhaittirun teNNik koLal

A. R. Raihanah

பொருள் / உரை

முருகா எளிய உரை

தக்க காரணமின்றித் தன்னை விட்டுப் பிரிந்து சென்று பின்னர் ஒரு காரணத்திற்காகத் திரும்பி வந்த சுற்றத்தானை, ஒரு தலைவன் அவன் நாடி வந்த தேவையை நிறைவேற்றி வைத்து, அவனது மனநிலையை நன்கு ஆராய்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• உழைப் பிரிந்து = தக்க காரணமின்றித் தன்னை விட்டுப் பிரிந்து சென்று,• காரணத்தின் வந்தானை = பின்னர் ஏதோ ஒரு தேவையால் திரும்பி வந்த சுற்றத்தானை,• வேந்தன் = ஒரு தலைவன்,• இழைத்திருந்து = அவன் நாடி வந்த தேவையை நிறைவேற்றி வைத்துப் பொறுத்திருந்து,• எண்ணிக் கொளல் = அவனது போக்கை நன்கு ஆராய்ந்து சுற்றமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க. (வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

Meaning in English

Who causeless went away, then to return, for any cause, ask leave; The king should sift their motives well, consider, and receive

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout