Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 529

பொருட்பால்அரசியல்53. சுற்றந்தழால்

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும்.

tamarAkit taRRuRantAr suRRam amarAmaikkAraNa minRi varum

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• தமர் ஆகி = முன்பு நெருங்கிய சுற்றத்தாராக இருந்து,• தன் துறந்தார் சுற்றம் = ஏதோ ஒரு காரணத்தால் தம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் உறவானது,• அமராமைக்காரணம் இன்றி = அவர்கள் பிரிந்து சென்றதற்குக் காரணமான மனக்கசப்பும் தவறுகளும் நம்மிடம் நீங்கியவுடன்,• வரும் = அவர்களாகவே தானாக மீண்டும் வந்து இணைந்து கொள்ளும்.எளிய விளக்கம்:முன்பு நெருங்கிய உறவினராக இருந்து மனக்கசப்பால் பிரிந்து சென்றவர்கள், அந்தப் பிரிவுக்குக் காரணமான தவறுகளும் குறைகளும் நம்மிடம் இல்லை என்பதை உணரும் போது, தானாகவே மீண்டும் வந்து நம்முடன் அன்போடு இணைந்து கொள்வார்கள்.

மு.வரதராசன்

முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

பரிமேலழகர்

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம். ('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.)

சாலமன் பாப்பையா

முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

Meaning in English

Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout