Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 526

பொருட்பால்அரசியல்53. சுற்றந்தழால்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.

perungkoTaiyAn pENAn vekuLi avaninmarungkuTaiyAr mAnilat til

Shreeranjani Deepak

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாராளமாக வாரி வழங்கும் வள்ளல்தன்மையும், சினம் கொள்ளாமல் பொறுமை காக்கும் சாந்த குணமும் கொண்ட ஒருவனைப் போல, அன்பு நிறைந்த சுற்றத்தாரைப் பெற்றிருப்பவர் இந்த உலகத்தில் வேறு யாருமில்லை.

• பெருங்கொடையான் = தாராளமாக வாரி வழங்கும் கொடைப் பண்பும்,• பேணான் வெகுளி = சினத்தை விரும்பாத சாந்த குணமும் உடையவனாக ஒருவன் இருந்தால்,• அவனின் = அவனைப் போல,• மருங்கு உடையார் = அன்பான சுற்றத்தாரைப் பெற்றிருப்பவர்கள்,• மாநிலத்து இல் = இந்தப் பரந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை.

மு.வரதராசன்

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

பரிமேலழகர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. (மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)

சாலமன் பாப்பையா

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

Meaning in English

Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gains

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout