Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 524

பொருட்பால்அரசியல்53. சுற்றந்தழால்

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்பெற்றத்தால் பெற்ற பயன்.

suRRattAR suRRap paTavozhukal selvantAnpeRRattAR peRRa payan

Swarnarekha Narayanan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதன் தான் ஈட்டிய செல்வத்தினால் அடையக்கூடிய மிகச் சிறந்த பயன், தன் உற்றார் உறவினர்களை ஆதரித்து, அவர்கள் எப்போதும் தன்னை அன்போடு சூழ்ந்து வாழும்படி அவர்களை அரவணைத்து வாழ்வதே ஆகும்.

• செல்வம் பெற்றத்தால் = ஒரு மனிதன் செல்வத்தைப் பெற்றதனால்,• பெற்ற பயன் = அடையக்கூடிய உண்மையான பலனாவது,• சுற்றத்தால் தான் சுற்றப்பட = தன் அன்பான சுற்றத்தாரால் தான் எப்போதும் சூழப்பட்டு,• ஒழுகல் = அவர்களை அரவணைத்து வாழ்வதே ஆகும்.

மு.வரதராசன்

சுற்றத்தால் தான் சூழப்பட்டு வாழும் வகையில் அவர்களைத் தழுவிக்கொண்டு வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.

பரிமேலழகர்

செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். (பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

Meaning in English

The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout