Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 523

பொருட்பால்அரசியல்53. சுற்றந்தழால்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.

aLavaLA villAtAn vAzhkkai kuLavaLAkkOTinRi nIrniRain taRRu

Kalyani Gowri Shankar

பொருள் / உரை

முருகா எளிய உரை

உற்றார் உறவினர்களோடு மனம் திறந்து அன்பு பாராட்டிப் பழகாதவனின் செல்வம் மற்றும் வாழ்க்கை, கரைகள் இல்லாத குளத்தில் நீர் நிறைந்தது போல, பாதுகாக்கும் துணையின்றி உடைந்து வீணாகப் பாழாகிவிடும்.

• அளவளாவு இல்லாதான் = சுற்றத்தாரோடு மனம் திறந்து பேசிப் பழகாதவனுடைய,• வாழ்க்கை = செல்வ வாழ்க்கையானது,• குளவளாக் கோடு இன்றி = குளப்பரப்பானது சுற்றிலும் பாதுகாப்புக் கரையே இல்லாமல்,• நீர் நிறைந்தற்று = நீரால் நிரம்பி வீணாக வழிந்து போவதைப் போன்றதாகும்.

மு.வரதராசன்

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

பரிமேலழகர்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று -குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும். (சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

Meaning in English

His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling bound

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout