Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 521

பொருட்பால்அரசியல்53. சுற்றந்தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.

paRRaRRa kaNNum pazhaimaipA rATTutalsuRRattAr kaNNE uLa

Vyjayanthi

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதன் செல்வம் அனைத்தையும் இழந்து வறுமையில் நிற்கும் காலத்திலும், அவனோடு தங்களுக்குள்ள பழைய உறவையும் அன்பையும் மறக்காமல் பாராட்டி அரவணைக்கும் குணம், அவனது உண்மையான சுற்றத்தாரிடமே உண்டு.

• பற்று அற்ற கண்ணும் = ஒரு மனிதன் செல்வம் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற வறியவனான காலத்திலும்,• பழைமை பாராட்டுதல் = பழைய பாசத்தையும் உறவையும் மறவாமல் பெருமையோடு பாராட்டித் தழுவிக்கொள்ளும் பண்பு,• சுற்றத்தார் கண்ணே உள = உண்மையான சுற்றத்தாரிடமே உண்டு.

மு.வரதராசன்

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

பரிமேலழகர்

பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

Meaning in English

When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout