Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 520

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.

nATORu nATuka mannan vinaiseyvAnkOTAmai kOTA tulaku

Reshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் நேர்மை தவறாமல் கடமையாற்றும் வரையில் நாடும் மக்களும் நல்வாழ்வு வாழ்வர்; எனவே ஒரு தலைவன் தன் பணியாளர்களின் செயல்பாடுகளை நாள்தோறும் விழிப்புடன் ஆராய்ந்து கண்காணிக்க வேண்டும்.

• வினைசெய்வான் கோடாமை = பொறுப்பில் உள்ள பணியாளர்கள் நேர்மை தவறாமல் செயல்படும் வரையில்,• உலகு கோடாது = உலகத்து மக்களும் துன்பமின்றி நல்வழியில் வாழ்வர்;• மன்னன் = எனவே ஒரு தலைவன்,• நாடோறும் நாடுக = தன் அதிகாரிகளின் செயல்பாடுகளை நாள்தோறும் விழிப்புடன் ஆராய்ந்து கவனிக்க வேண்டும்.

மு.வரதராசன்

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

பரிமேலழகர்

வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க. (அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Meaning in English

Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout