Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 519

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு.

vinaikkaN vinaiyuTaiyAn kENmaivE RAkaninaippAnai nIngkun tiru

Gauhar Krishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

எடுத்த காரியத்தை முடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உழைக்கும் ஆற்றலாளனின் நெருக்கமான நட்பையும் உரிமையையும் தவறாக எண்ணி அவனைச் சந்தேகப்படும் தலைவனை விட்டு, செல்வமும் வெற்றியும் அகன்றுவிடும்.

• வினைக்கண் வினை உடையான் = எப்போதும் தொழிலில் கண்ணும் கருத்துமாக உழைக்கும் ஆற்றலாளனின்,• கேண்மை = தோழமையையும் உரிமையையும்,• வேறாக நினைப்பானை = பொறாமைக்காரர்களின் பேச்சைக் கேட்டுத் தவறாக எண்ணும் தலைவனை விட்டு,• திரு நீங்கும் = செல்வமும் வெற்றியும் நீங்கிப் போய்விடும்.

மு.வரதராசன்

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

பரிமேலழகர்

வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். (கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

Meaning in English

Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout