வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.
vinaikkurimai nATiya pinRai avanaiataRkuriya nAkas seyal
Sumathy Sathyamoorthi
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு காரியத்தைச் செய்வதற்கு ஒருவன் தகுதியானவன் என்று ஆராய்ந்து முடிவெடுத்த பின்னர், அந்தச் செயலைச் சுயமாகச் செய்து முடிக்கும் முழு அதிகாரத்தையும் உரிமையையும் அவனுக்கு வழங்கி அவனை உயர்த்த வேண்டும்.
• வினைக்கு உரிமை நாடிய பின்றை = ஒருவன் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முழுத் தகுதியுடையவன் என்று ஆராய்ந்த பின்னர்,• அவனை = அந்த நபரை,• அதற்கு உரியனாகச் செயல் = அச்செயலைத் தானே முடிக்கும் முழு உரிமையும் அதிகாரமும் கொண்டவனாக உயர்த்தி வைக்க வேண்டும்.
மு.வரதராசன்
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர்
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
Meaning in English
As each man's special aptitude is known, Bid each man make that special work his own





