இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.
itanai itanAl ivanmuTikkum enRAyntatanai avankaN viTal
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
இந்தக் காரியத்தை இன்ன சாதனங்களைக் கொண்டு இன்னார்தான் சிறப்பாகச் செய்து முடிப்பார் என்று தீர ஆராய்ந்த பிறகு, அந்தப் பணியின் முழுப் பொறுப்பையும் அவரிடமே முழு நம்பிக்கையோடு ஒப்படைத்து விட வேண்டும்.
• இதனை = இந்தச் செயலை,• இதனால் = இந்த வழிமுறைகளாலும் துணைக் கருவிகளாலும்,• இவன் முடிக்கும் = இந்த மனிதன் சிறப்பாகச் செய்து முடிப்பான்,• என்று ஆய்ந்து = என்று தீர ஆராய்ந்து அறிந்த பின்னர்,• அதனை = அச்செயலின் முழுப் பொறுப்பையும்,• அவன்கண் விடல் = அவனிடமே முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும்.
மு.வரதராசன்
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
பரிமேலழகர்
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. (கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)
சாலமன் பாப்பையா
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
Meaning in English
'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand





