Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 514

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.

enaivakaiyAn tERiyak kaNNum vinaivakaiyAnvERAkum mAntar palar

Baranai Kannan

பொருள் / உரை

முருகா எளிய உரை

எத்தனை வகைகளில் ஆராய்ந்து சோதித்துப் பொறுப்புகளை ஒப்படைத்தாலும், கையில் அதிகாரமும் பொருளும் வந்தவுடன் செயலில் தடம் மாறிப் போகும் மனிதர்கள் பலர் உண்டு; எனவே அவர்களைத் தொடர்ந்து விழிப்புடன் கவனிக்க வேண்டும்.

• எனை வகையான் தேறியக் கண்ணும் = எவ்வளவோ வழிகளில் ஆராய்ந்து நம்பிப் பொறுப்பில் அமர்த்திய போதிலும்,• வினைவகையான் = நடைமுறையில் பணமும் அதிகாரமும் கைக்கு வரும் போது செயல்களால்,• வேறாகும் மாந்தர் = தடம் மாறி வேறுபட்டுப் போகும் மனிதர்கள்,• பலர் = உலகில் பலர் உண்டு.

மு.வரதராசன்

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

பரிமேலழகர்

எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். (கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

Meaning in English

Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action tried

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout