Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 512

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை.

vAri perukki vaLampaTut tuRRavaiArAyvAn seyka vinai

Deepika G S

பொருள் / உரை

முருகா எளிய உரை

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, அதன் மூலம் வளங்களைப் பெருக்கி, தொழில் மற்றும் சமுதாயத்திற்கு வரும் இடையூறுகளை உடனுக்குடன் ஆராய்ந்து தீர்க்கும் ஆற்றல் படைத்தவனே முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டும்.

• வாரி பெருக்கி = பொருள் வரும் வழிகளைப் பெருக்கி,• வளம் படுத்து = அதன் மூலம் வளங்களை மேலும் வளரச் செய்து,• உற்றவை ஆராய்வான் = தொழில் மற்றும் வருவாய்க்கு வரும் தடைகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே,• வினை செய்க = முதன்மையான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

பரிமேலழகர்

வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து - அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் -அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க - அரசனுக்கு வினை செய்க. (வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)

சாலமன் பாப்பையா

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

Meaning in English

Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout