Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 511

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.

nanmaiyum tImaiyum nATi nalampurintatanmaiyAn ALap paTum

Mohanlal

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு காரியத்தில் ஏற்படக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் தீர ஆராய்ந்து, எப்போதுமே நன்மை பயக்கும் வழிகளையே தேர்ந்தெடுத்துச் செய்யும் பண்புடையவனையே முக்கியமான பணிகளில் அமர்த்தி ஆள வேண்டும்.

• நன்மையும் தீமையும் நாடி = ஒரு செயலின் ஆக்கப்பூர்வமான நன்மைகளையும் வரக்கூடிய தீமைகளையும் நன்கு ஆராய்ந்து,• நலம் புரிந்த தன்மையான் = அவற்றுள் நன்மை தரும் நல்ல வழிகளையே விரும்பிச் செய்யும் நற்குணம் உடையவனே,• ஆளப்படும் = ஒரு தலைவனால் முதன்மையான பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும்.

மு.வரதராசன்

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பரிமேலழகர்

நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும். (தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)

சாலமன் பாப்பையா

ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

Meaning in English

Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout