Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 509

பொருட்பால்அரசியல்51. தெரிந்துதெளிதல்

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.

tERaRka yAraiyun tErAtu tErntapintERuka tERum poruL

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவரையும் முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல் ஒரு பொறுப்பில் நியமிக்கக் கூடாது; ஆனால் ஒருவரை நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு, அவரிடம் எந்தச் சந்தேகமும் கொள்ளாமல் முழுமையாக நம்பிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

• தேராது = ஒருவரைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறியாமல்,• யாரையும் தேறற்க = எவரையும் ஒரு பொறுப்பில் நம்பி அமர்த்தக் கூடாது;• தேர்ந்த பின் = அவ்வாறு நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பின்னர்,• தேறும் பொருள் = அவரிடம் ஒப்படைக்கத் தகுந்த காரியங்களில்,• தேறுக = சந்தேகம் கொள்ளாமல் முழுமையாக நம்பி ஒப்படைக்க வேண்டும்.

மு.வரதராசன்

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

பரிமேலழகர்

யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)

சாலமன் பாப்பையா

எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

Meaning in English

Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout