தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.
tErAn piRanait teLintAn vazhimuRaitIrA iTumpai tarum
Vinod Venugopal
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• தேரான் = ஒருவரின் குணங்களையும் நம்பகத்தன்மையையும் ஆராயாமல்,• பிறனைத் தெளிந்தான் = அறிமுகமில்லாத ஒருவரை நம்பிப் பொறுப்பில் அமர்த்தியவனுக்கு,• வழிமுறை = அவனது தலைமுறைக்கும்,• தீரா இடும்பை தரும் = ஒருபோதும் நீங்காத பெரும் துன்பங்களை உண்டாக்கிவிடும்.எளிய விளக்கம்:ஒருவரின் குணங்களையும் பின்புலத்தையும் நன்கு ஆராய்ந்து பார்க்காமல், அறிமுகமில்லாத ஒருவரை நம்பிப் பொறுப்பில் அமர்த்தினால், அது அவனுக்கு மட்டுமின்றி அவனது வழித்தோன்றல்களுக்கும் தீராத பெரும் துன்பத்தை விளைவித்துவிடும்.
மு.வரதராசன்
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர்
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)
சாலமன் பாப்பையா
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
Meaning in English
Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race





