Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 507

பொருட்பால்அரசியல்51. தெரிந்துதெளிதல்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்.

kAtanmai kantA aRivaRiyArt tERutalpEtaimai ellAn tarum

Banu Ganapathi

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவர் மீது உள்ள சொந்தப் பாசத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, உரிய அறிவுத் திறமை இல்லாதவரை ஒரு பொறுப்பில் நம்பி அமர்த்துவது, எல்லாவிதமான நஷ்டங்களையும் பெரும் முட்டாள்தனமான விளைவுகளையும் உண்டாக்கும்.

• காதன்மை கந்தா = ஒருவர் மீது உள்ள சொந்த அன்பை மட்டுமே காரணமாக வைத்து,• அறிவு அறியார்த் தேறுதல் = அறிய வேண்டிய அறிவுத்திறன் இல்லாதவரை நம்பிப் பொறுப்பில் வைப்பது,• பேதைமை எல்லாம் தரும் = தலைவனுக்கு எல்லாவிதமான அறியாமைத் துன்பங்களையும் இழப்புகளையும் தந்துவிடும்.

மு.வரதராசன்

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

பரிமேலழகர்

காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும் (தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

Meaning in English

By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly's blind control

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout