Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 505

பொருட்பால்அரசியல்51. தெரிந்துதெளிதல்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல்.

perumaikkum Enais siRumaikkun tattangkarumamE kaTTaLaik kal

Pop Shalini

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதனின் உயர்ந்த குணத்தையும், அவனது இழிவான சிறுமையையும் உரசிப் பார்த்துத் தெளிவாக அறிந்து கொள்ளும் உரைகல்லாக விளங்குவது, அவர் செய்யும் செயல்களே ஆகும்.

• பெருமைக்கும் = ஒரு மனிதனின் உயர்ந்த பெருமைக்கும்,• ஏனைச் சிறுமைக்கும் = அவனது இழிவான சிறுமைக்கும்,• கட்டளைக்கல் = பொன்னின் தரத்தை உரசிப் பார்க்கும் உரைகல்லாக இருப்பது,• தத்தம் கருமமே = அவரவர் செய்யும் செயல்களே ஆகும்.

மு.வரதராசன்

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

பரிமேலழகர்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை. (இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும் முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

Meaning in English

Of greatness and of meanness too, The deeds of each are touchstone true

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout