Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 503

பொருட்பால்அரசியல்51. தெரிந்துதெளிதல்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.

ariyakaR RAsaRRAr kaNNun teriyungkAlinmai aritE veLiRu

Ramesh Rajagopalan

பொருள் / உரை

முருகா எளிய உரை

அரிய பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த குற்றமற்ற அறிஞர்களிடத்திலும் கூட, நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் ஏதேனும் ஒரு சிறு அறியாமை அல்லது குறைபாடு இல்லாமல் இருப்பது மிக அரிதாகும்.

• அரிய கற்று = கற்பதற்கு அரிய சிறந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்து,• ஆசு அற்றார் கண்ணும் = குற்றங்கள் இல்லாத சான்றோரிடத்திலும் கூட,• தெரியுங்கால் = கூர்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது,• வெளிறு = அறியாமை அல்லது சிறு குறைபாடு• இன்மை அரிதே = அறவே இல்லாதிருப்பது மிக அரிதாகும்.

மு.வரதராசன்

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

பரிமேலழகர்

அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

Meaning in English

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom free

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout