குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் கட்டே தெளிவு.
kuTippiRantu kuRRattin nIngki vaTuppariyumnANuTaiyAn kaTTE teLivu
Charumathy Shankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
நல்ல குடும்பத்தில் பிறந்து, குற்றங்கள் ஏதும் இல்லாதவனாய், தன் மீது சிறு பழிச்சொல் கூட வந்துவிடக்கூடாது என்று நாணி அஞ்சும் நல்லவனிடத்திலேயே பொறுப்புகளை நம்பி ஒப்படைக்க வேண்டும்.
• குடிப்பிறந்து = நற்பண்புகள் நிறைந்த நல்ல குடும்பத்தில் பிறந்து,• குற்றத்தின் நீங்கி = எந்தக் குற்றமும் தீய பழக்கமும் இன்றி,• வடுப் பரியும் = தனக்கோ தன் குடும்பத்திற்கோ பழிச்சொல் வந்துவிடுமோ என்று அஞ்சி• நாண் உடையான்கட்டே = வெட்கப்படும் நாணம் கொண்டவனிடத்திலேயே• தெளிவு = ஒருவனை நம்பிப் பொறுப்பை ஒப்படைக்கும் தெளிவு இருக்க வேண்டும்.
மு.வரதராசன்
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
பரிமேலழகர்
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. (குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
Meaning in English
Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide





