Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 5

அறத்துப்பால்பாயிரவியல்1. கடவுள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

iruLsEr iruvinaiyum sErA iRaivanporuLsEr pukazhpurintAr mATTu

திருக்குறள் 5: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

இறைவன் புகழை நாளும் போற்றுபவரிடம்!அவன் மெய்யான பெருமை பாடுபவரிடம்!அறியாமை இருளால் வரும் வினை சேராது!நல்வினையும் தீவினையும் அவரைச் சேராது!

• இறைவன் = முழுமுதற் கடவுளின்• பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு = மெய்ம்மையான உண்மைப் புகழை விரும்பி இடைவிடாது போற்றுபவரிடத்தில்,• இருள் சேர் = அறியாமை இருளினால் உண்டாகக்கூடிய• இருவினையும் = நல்வினை, தீவினை என்னும் இருவகைக் கர்ம வினைகளும்• சேரா = ஒருபோதும் வந்து பற்றுவதில்லை.

மு.வரதராசன்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

பரிமேலழகர்

இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)

சாலமன் பாப்பையா

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

Meaning in English

The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout