Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 4

அறத்துப்பால்பாயிரவியல்1. கடவுள் வாழ்த்து

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.

vENTutalvEN TAmai ilAnaTi sErntArkkuyANTum iTumpai ila

திருக்குறள் 4: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

விருப்பு வெறுப்பற்ற இறைவன் அடியார்க்கு!அவன் திருவடியை என்றும் நினைப்பவர்க்கு!எந்தக் காலத்திலும் துன்பம் வருவதே இல்லை!எந்த இடத்திலும் துன்பம் வருவதே இல்லை!

• வேண்டுதல் வேண்டாமை இலான் = எதன் மீதும் விருப்போ வெறுப்போ இல்லாத இறைவனுடைய• அடி சேர்ந்தார்க்கு = திருவடிகளை இடைவிடாது தியானித்துச் சரணடைந்தவர்களுக்கு,• யாண்டும் = எக்காலத்திலும் எவ்விடத்திலும்• இடும்பை இல = எந்தவொரு துன்பமும் உண்டாவதில்லை.

மு.வரதராசன்

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

பரிமேலழகர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

சாலமன் பாப்பையா

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

Meaning in English

His foot, 'Whom want affects not, irks not grief,' who gain Shall not, through every time, of any woes complain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout