சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.
siRupaTaiyAn selliTanj sErin uRupaTaiyAnUkkam azhintu viTum
Haridayal Babu
பொருள் / உரை
முருகா எளிய உரை
சிறிய படையை உடையவன் தனக்குச் சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்து நின்று போரிடும் போது, பெரும்படை உடையவன் அங்கு சென்று தாக்கினால் அவனது படைப்பலமும் மன ஊக்கமும் அழிந்து தோல்வியடைவான்.
• உறு படையான் = பெரும் படையை உடைய அரசன்,• சிறு படையான் செல் இடம் சேரின் = சிறிய படையுடையவன் தனக்குச் சாதகமாக நிலைபெற்றுள்ள இடத்திற்குள் சென்று தாக்கினால்,• ஊக்கம் அழிந்து விடும் = அவனது பெருமையும் படை பலமும் வலிமை இழந்து அழியும்.
மு.வரதராசன்
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
பரிமேலழகர்
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். ('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
Meaning in English
If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail





