Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 497

பொருட்பால்அரசியல்50. இடனறிதல்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின்.

anjsAmai yallAl tuNaivENTA enjsAmaieNNi yiTattAR seyin

Saptaparna Chakraborty

பொருள் / உரை

முருகா எளிய உரை

செயலை வெற்றிகரமாக முடிக்கும் வழிகளை முழுமையாக ஆராய்ந்து, சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட்டால், தனது அஞ்சாத நெஞ்சுரத்தைத் தவிர வேறு எந்தத் துணையும் தேவையில்லை.

• எஞ்சாமை எண்ணி = செயலின் அனைத்து வழிவகைகளையும் குறையின்றித் திட்டமிட்டு,• இடத்தான் செயின் = அதற்குரிய சாதகமான களத்தைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட்டால்,• அஞ்சாமை அல்லால் = விடாமுயற்சியுடன் கூடிய மனத்துணிவைத் தவிர• துணை வேண்டா = வேறு எந்த வெளிப்புறத் துணையும் தேவையில்லை.

மு.வரதராசன்

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

பரிமேலழகர்

எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை. ('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

Meaning in English

Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout