Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 490

பொருட்பால்அரசியல்49. காலமறிதல்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.

kokkokka kUmpum paruvattu maRRatankuttokka sIrtta iTattu

Vijaynarain

பொருள் / உரை

முருகா எளிய உரை

வாய்ப்புக் காலம் கனியும் வரை ஓடும் நீரில் கொக்கு நிற்பது போல் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்; சாதகமான வாய்ப்பு கிடைத்த உடனே, கொக்கு மின்னல் வேகத்தில் இரையைக் குத்திப் பிடிப்பது போல் குறிதவறாமல் காரியத்தை உடனே முடித்துவிட வேண்டும்.

• கூம்பும் பருவத்து = ஒரு செயலைத் தொடங்காமல் அடங்கிப் பொறுத்திருக்க வேண்டிய காலத்தில்,• கொக்கு ஒக்க = ஓடும் நீரில் ஒற்றைக் காலில் அசையாமல் நிற்கும் கொக்கைப் போல அமைதியாகக் காத்திருக்க வேண்டும்;• மற்று = பிறகு,• சீர்த்த இடத்து = தனக்குரிய சாதகமான நல்ல வாய்ப்புக் காலம் கைகூடி வரும் போது,• அதன் குத்து ஒக்க = கொக்கு குறிதவறாமல் மின்னல் வேகத்தில் இரையைக் குத்திப் பிடிப்பது போல, அச்செயலைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

மு.வரதராசன்

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பரிமேலழகர்

கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க. (மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் குத்து ஒக்க என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் .ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும்இலக்கணம் கூறியவாறாயிற்று.)

சாலமன் பாப்பையா

ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Meaning in English

As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout