Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 489

பொருட்பால்அரசியல்49. காலமறிதல்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.

eytaR kariya tiyaintakkAl annilaiyEseytaR kariya seyal

Nakul Abhyankar

பொருள் / உரை

முருகா எளிய உரை

கிடைப்பதற்கு மிக அரிய நல்வாய்ப்பும் சாதகமான காலமும் வந்து வாய்க்குமானால், அந்த அரிய வாய்ப்பு நழுவிப் போவதற்கு முன் அப்போதே துணிந்து செயல்பட்டு, மிக அரிய மாபெரும் காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும்.

• எய்தற்கு அரியது = பெறுவதற்கு மிக அரிய சாதகமான ஒரு நல்ல வாய்ப்புக் காலம்,• இயைந்தக்கால் = தனக்கு வந்து வாய்க்குமானால்,• அந்நிலையே = அந்த அரிய வாய்ப்பு நழுவிப் போவதற்கு முன்பாக அந்த விநாடியிலேயே,• செய்தற்கு அரிய செயல் = மற்றக் காலங்களில் செய்ய முடியாத மிக அரிய மாபெரும் சாதனைகளைச் செய்து முடிக்க வேண்டும்.

மு.வரதராசன்

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

பரிமேலழகர்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க. (ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

Meaning in English

When hardest gain of opportunity at last is won, With promptitude let hardest deed be done

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout