Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 486

பொருட்பால்அரசியல்49. காலமறிதல்

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.

Ukka muTaiyAn oTukkam porutakartAkkaRkup pErun takaittu

Malathi Anand

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆற்றல் மிகுந்த வீரன் காலம் கனியும் வரை அடங்கி அமைதியாக இருப்பது கோழைத்தனம் அல்ல; அது சண்டையிடும் ஆட்டுக்கடா தன் எதிரியை ஓங்கி முட்டித் தாக்குவதற்காகப் பின்னே கால்களை வாங்கிப் பதுங்குவதைப் போன்ற உத்தியாகும்.

• ஊக்கம் உடையான் = மன உறுதியும் பேராற்றலும் கொண்ட ஒரு வீரன்,• ஒடுக்கம் = உரிய காலத்தை எதிர்பார்த்து அமைதியாக அடங்கிப் பின்வாங்கி இருப்பது என்பது,• பொரு தகர் = களத்தில் சண்டையிடும் ஆட்டுக்கடாவானது,• தாக்கற்கு = தன் எதிரியைப் பாய்ந்து பலமாக முட்டித் தாக்குவதற்காக,• பேரும் தகைத்து = பின்னே சில அடிகள் கால்வாங்கிப் பதுங்குவதைப் போன்ற தன்மையுடையதாகும்.

மு.வரதராசன்

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

பரிமேலழகர்

ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. (உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

Meaning in English

The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout