Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 485

பொருட்பால்அரசியல்49. காலமறிதல்

காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.

kAlang karuti iruppar kalangkAtunjAlang karutu pavar

Sre Surendherr

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகம் முழுவதையும் வெல்ல நினைக்கும் ஆற்றல்மிக்க தலைவர்கள், அவசரப்பட்டு மனம் கலங்கிவிடாமல், வெற்றிக்குரிய சாதகமான காலம் வரும் வரை அமைதியோடு பொறுத்திருப்பார்கள்.

• ஞாலம் கருதுபவர் = உலகத்தையே முழுமையாக வென்று ஆட்சி செய்யக் கருதும் தலைவர்கள்,• கலங்காது = இடையில் வரும் சோதனைகளைக் கண்டு பதற்றமடையாமலும் மனம் கலங்காமலும்,• காலம் கருதி = தமக்கு வெற்றி தரக்கூடிய சாதகமான காலம் கனியும் வரையில்,• இருப்பர் = பொறுமையோடு அமைதியாகக் காத்திருப்பார்கள்.

மு.வரதராசன்

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

பரிமேலழகர்

கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

Meaning in English

Who think the pendant world itself to subjugate, With mind unruffled for the fitting time must wait

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout