பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
pakalvellung kUkaiyaik kAkkai ikalvellumvEntarkku vENTum pozhutu
Radhika A V
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னைவிட வலிமையான ஆந்தையைப் பகல் நேரத்தில் காக்கை எளிதாக வென்றுவிடும்; அதுபோலவே, தம்மைவிடப் பலம் பொருந்திய பகைவரை வெல்ல நினைக்கும் தலைவர்களுக்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுதல் மிக மிக அவசியமாகும்.
• காக்கை = தன்னைவிட உடல்வலிமை மிகுந்த• கூகையை = ஆந்தையை அல்லது கோட்டானை,• பகல் வெல்லும் = பகல் நேரத்தில் (அதன் கண்பார்வை மங்கும் வேளையில்) எளிதாக வென்றுவிடும்;• இகல் வெல்லும் வேந்தர்க்கு = அதுபோலவே, வலிமைமிக்க பகைவரை வெல்ல விரும்பும் ஆட்சியாளர்களுக்கு• பொழுது வேண்டும் = அதற்குப் பொருத்தமான சாதகமான காலம் இன்றியமையாத தேவையாகும்.
மு.வரதராசன்
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
பரிமேலழகர்
கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது. (எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
Meaning in English
A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight





