ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை.
AkA RaLaviTTi tAyinung kETillaipOkA RakalAk kaTai
Sreekrishnan Swaminathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
வருமானம் வருகின்ற வழி சிறியதாக இருந்தாலும் கூட, செலவு செய்கின்ற வழி அந்த வருமானத்தை விடப் பெரிதாகாமல் கட்டுக்குள் இருக்குமானால் ஒருவனுக்கு எந்தக் காலத்திலும் அழிவோ நஷ்டமோ வராது.
• ஆகு ஆறு = ஒருவனுக்குப் பொருள் வருகின்ற வருமானத்தின் வழியானது,• அளவு இட்டிது ஆயினும் = அளவில் மிகச் சிறியதாகக் குறைவாகவே இருந்தாலும்,• போகு ஆறு = பொருள் வெளியேறிச் செல்லக்கூடிய செலவின் வழியானது,• அகலாக் கடை = அந்த வருமானத்தை விடப் பெரிதாக விரிவடையாமல் கட்டுக்குள் இருக்குமானால்,• கேடு இல்லை = அதனால் அவனது வாழ்க்கைக்கு எந்தவொரு நஷ்டமும் அழிவும் உண்டாகாது.
Murugaa simple commentary
Even if the way income comes is small, if the way expenses are made remains under control without becoming bigger than that income, ruin or loss will never come to a person at any time.
• The incoming way = The way of income through which wealth comes to a person,• Even if small in measure = Even if it is very small and meager in measure,• The outgoing way = The way of expenditure through which wealth goes out,• If it does not widen = If it remains under control without expanding bigger than that income,• There is no ruin = Because of that, no loss or ruin whatsoever will occur to his life.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
பரிமேலழகர்
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)
Parimelazhagar
Even if the measure of the way of coming is small, there is no harm, even if the measure of the way by which wealth comes to a king becomes small, there will be no harm by that: if the way of going does not widen, if the measure of the way of going does not grow greater than that. (The actions of quality that came as 'it is small' and 'it does not widen' stood upon wealth. 'Wealth' was supplied from the chapter heading, and 'measure' was also joined and explained in the latter part. It means there is no harm even if income and expenditure are equal to each other.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
Meaning in English
Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spare

