Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 470

பொருட்பால்அரசியல்47. தெரிந்துசெயல்வகை

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு.

eLLAta eNNis seyalvENTun tammoTukoLLAta koLLA tulaku

Lincy Diana

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் தகுதிக்கும் கௌரவத்திற்கும் பொருந்தாத இழிவான முறைகளை உலகம் ஒருபோதும் ஏற்காது; ஆகவே, உலகத்துச் சான்றோர்கள் இகழாத நன்மதிப்புமிக்க வழிகளை ஆராய்ந்து திட்டமிட்டே செயல்களைச் செய்ய வேண்டும்.

• தம்மொடு கொள்ளாத = ஒருவருடைய தகுதி, கௌரவம் மற்றும் அறநெறிக்குப் பொருந்தாத இழிவான வழிகளை• உலகு கொள்ளாது = அறிவுடைய உலகம் ஒருபோதும் ஏற்காது, இகழ்ந்து தள்ளிவிடும்;• எள்ளாத = ஆகவே, சான்றோர்கள் எள்ளி நகையாடி இகழாத உன்னதமான வழிகளை• எண்ணிச் செயல் வேண்டும் = தீர ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

மு.வரதராசன்

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

பரிமேலழகர்

தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க. ('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

Meaning in English

Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout