நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.
nanRARRa luLLun tavaRuN TavaravarpaNpaRin tARRAk kaTai
Navya Bhaskaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒவ்வொருவருடைய இயல்பையும் மனக்குணத்தையும் நன்கு ஆராய்ந்து அறிந்து அதற்கேற்பச் செயல்படாவிட்டால், நல்லதே செய்ய நினைத்தாலும் அது தவறாகிப் பெரும் தீமையில் முடிந்துவிடும்.
• அவரவர் பண்பு அறிந்து = உதவிகள் அல்லது ஆலோசனைகளைப் பெறும் ஒவ்வொருவரின் குணத்தையும் மனநிலையையும் நன்கு உணர்ந்து,• ஆற்றாக் கடை = அதற்குப் பொருந்துமாறு செய்யாமல் போனால்,• நன்று ஆற்றல் உள்ளும் = ஒருவருக்கு நல்லது செய்ய நினைப்பதிலும் கூட,• தவறு உண்டு = பெரும் பிழையும் கேடும் உண்டாகித் தீமையாய் முடியும்.
மு.வரதராசன்
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
பரிமேலழகர்
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.)
சாலமன் பாப்பையா
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
Meaning in English
Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid





