எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு.
eNNit tuNika karuman tuNintapineNNuva menpa tizhukku
Akshatha K
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்தவொரு செயலையும் முடிக்கும் வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து திட்டமிட்ட பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; காரியத்தில் இறங்கிய பிறகு 'பார்த்துக் கொள்ளலாம்' என்று யோசிப்பது தீராத இழுக்கையும் தோல்வியையும் தரும்.
• கருமம் = செய்ய வேண்டிய ஒரு காரியத்தை• எண்ணித் துணிக = முடிப்பதற்குரிய அனைத்து வழிமுறைகளையும் ஆழமாக ஆராய்ந்து திட்டமிட்ட பிறகே துணிந்து தொடங்க வேண்டும்;• துணிந்த பின் = காரியத்தில் இறங்கித் தொடங்கிய பிறகு,• எண்ணுவம் என்பது = 'இனி வரும் தடைகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று யோசிப்பது• இழுக்கு = மீள முடியாத பெருங்குற்றமும் அவமானத் தோல்வியும் ஆகும்.
மு.வரதராசன்
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
பரிமேலழகர்
கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான். (துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
Meaning in English
Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,' disgraced shall be





