Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 465

பொருட்பால்அரசியல்47. தெரிந்துசெயல்வகை

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு.

vakaiyaRas sUzhA tezhutal pakaivaraippAttip paTuppatO rARu

A. K. Siva

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு செயலின் அனைத்து வழிமுறைகளையும் முழுமையாக ஆராய்ந்து திட்டமிடாமல் அவசரப்பட்டுத் தொடங்குவது என்பது, நம்முடைய எதிரிகளை உரம் நிறைந்த விளைநிலத்துப் பாத்தியில் நட்டு அவர்களை மேலும் வலிமையோடு வளர்த்து விடுவதற்குச் சமமாகும்.

• வகை அறச் சூழாது = ஒரு செயலைச் செய்வதற்குரிய வழிகள், எதிர்வரும் ஆபத்துகள், தீர்வுகள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து திட்டமிடாமல்,• எழுதல் = அவசரப்பட்டு அச்செயலில் இறங்கித் தொடங்குவது என்பது,• பகைவரை = நம்மை எதிர்க்கும் பகைவர்களை,• பாத்திப் படுப்பது ஓர் ஆறு = உரம் நிறைந்த நன்செய் நிலத்துப் பாத்தியில் நட்டு அவர்களை மென்மேலும் வளரச் செய்வதற்கு ஒப்பான ஒரு வழியாகும்.

மு.வரதராசன்

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

பரிமேலழகர்

வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம். (அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

Meaning in English

With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout