Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 464

பொருட்பால்அரசியல்47. தெரிந்துசெயல்வகை

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர்.

teLivi latanait toTangkAr iLivennumEtappA Tanjsu pavar

Bratheksha B K

பொருள் / உரை

முருகா எளிய உரை

செயல் தோல்வியடைந்தால் பழிச்சொல்லும் அவமானமும் வந்துவிடுமே என்று அஞ்சி மானத்தைக் காக்கும் சான்றோர்கள், போதிய தெளிவும் உறுதியான திட்டமும் இல்லாத எந்தவொரு செயலையும் அவசரப்பட்டுத் தொடங்க மாட்டார்கள்.

• இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் = தோல்வியால் தமக்கு உலகத்தாரின் பழிச்சொல்லும் அவமானமும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி மானத்தைக் காக்கும் சான்றோர்கள்,• தெளிவு இலதனை = வெற்றி பெறுமா என்ற தெளிவான திட்டமும் உறுதியும் இல்லாத எந்தவொரு செயலையும்• தொடங்கார் = ஒருபோதும் அவசரப்பட்டுத் தொடங்க மாட்டார்கள்.

மு.வரதராசன்

இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

பரிமேலழகர்

தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார். (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

Meaning in English

A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout